வியாழன், 9 ஜூலை, 2009

"பூப்பூவாப் பறந்து போகும் பட்டுப்பூச்சியக்கா - நீ பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா.?"
அகரத்தில் ஆரம்பிப்பதுதானே முறை.
அழகான மணற்பரப்பில் "அ" எழுதி அன்னை தமிழை எனக்கு ஊட்டிய ஆரம்பக் கல்விக்கூடம் வல்வையின் "கணபதி பாலர் பாடசாலை"
"பூப்பூவாப் பறந்து போகும் பட்டுப்பூச்சியக்கா - நீ
பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா."
அசை போடல் ஆடு மாடுகளுக்கு மட்டுந்தானா?
கூடப்படித்தவர்கள் பலர் விரிந்து பரந்த உலகில்,
சிலர் மலர்ப்படுக்கையிட்டு மாவீரர் இல்லங்களில்..... என் இதயம் கனப்பதும், கசிவதும் இவர்களிடத்தில் மட்டுமே.
அந்த அழகான நாட்கள் இன்னும் எனக்குள் எண்ணச்சிறகுகளை விரித்துப் பறக்கின்றன. திரும்பத் திரும்ப கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பதில் தனிச்சுகம்.
2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

rNfhjup rfhwhTf;F..
VNjh xU ehspy; ehDk; me;j gbg;gfj;jpd; jho;thuj;jpd; fPo;
ehDk; vd; Njhoh;fSk; kiof;fhfNth nfhLk; ntapYf;fhfNth
epd;W nrd;wpUg;Nghk;.kPz;Lk; me;j epidTfis kPl;f cjtpajw;F ed;wp!ed;wp!!
-,sk; gwit-

வல்வை சகாறா சொன்னது…

"சகோதரி சகாறாவுக்கு..
ஏதோ ஒரு நாளில் நானும் அந்த படிப்பகத்தின் தாழ்வாரத்தின் கீழ்
நானும் என் தோழர்களும் மழைக்காகவோ கொடும் வெயிலுக்காகவோ
நின்று சென்றிருப்போம்.மீண்டும் அந்த நினைவுகளை மீட்க உதவியதற்கு நன்றி!நன்றி!!
-இளம் பறவை'

நன்றி 'இளம் பறவை' இந்தவலைப்பதிவின் வாயிலாகத்தன்னும் என்னுடன் கற்ற இளமைக்கால நண்பர்களை அல்லது எனக்கு முன்பாகவோ, பின்னராகவோ கற்றவர்களை வலையுலகில் அடையாளம் காண விளைகிறேன்.