புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி
காலப் பெரு வெளியில் - ஈழக்கதை எழுதும் இளைய தேவரீரே!
தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனைதரணிக்கு விட்டுச்சென்ற தமிழ்மானப் புதல்வர்களே!
வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்குஉரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே!
கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும்,இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும்சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும்.
நீங்கள் இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும்,இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது.
வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து,விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர்.
இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங்களச் செழுங்கவியும் - உம் சிறப்பெடுத்துப் பாட, அவர் சந்ததிக்கும் காப்புத் தந்து, சாவணைத்துப் போனீர்கள்.
விலைபோகாத் திருமகனின் வீரப்புதல்வர்களே!வான் கிழிக்கும் வல்லரக்கர் வடிவுடைத்துப் போட்டு,மனக்கூன் நிமிர்த்தி, மறவேங்கை மௌனம் கலைத்து,வலுவூட்டி வளியானீர்! வரலாற்றுத் திருவானீர்!
இனி இதுகாலம் பிணங்குவித்த இயந்திரக் கழுகுபலஇடிந்துதிர்ந்த ஒலி, உலகின் கேளாச்செவிகளுக்கு கேட்டதென்று ஓலை வரும்
கையெடுத்துக் குலுக்கியும், கனிமுகம் காட்டியும், எழுதீயின் கனம் தணிக்க கட்டாயம் பலர் வருவர்.
கலிமீது கலிதூவி தமிழர் வாழ்வெங்கும் வலிதூவும் வல்லபல அரசுகளும் வாசலிலே வந்திளிக்கும்.
அரங்கிற்கு மறைவாக ஆயதவளங் கொடுத்தோரும் - தம் சிரங்கு முகம் மறைத்து சிறப்பாய்வு செய்ய வருவர்.
புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி - இதுபொல்லாத இனவாதம் பொறி கலங்கும் முதற்படி.
இதயத்தின் மத்தியிலே இடிவிழுந்து கிடக்கும் இலங்கைக்கு இனித்தான் முடிவுரை. இதுவே சுதந்திர ஈழத்தின் முகவுரை.
3 கருத்துகள்:
இறந்து போன உடல்களில் இனவாதம் பார்க்கிறார்கள்.இவர்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்?????????
இதிலும் மிகக் கொடுமை ஆனந்த சங்கரியார் விட்ட அறிக்கை தான்.துரோகி..ஆனந்த சங்கரியார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறாராம்...முழுத்தமிழினமும் பெருமை பட்டுக்கொண்டிருக்கிர்றோம்.எங்கள் வீரர்க்கு வீர வணக்கம்.
.நான் எல்லாம் இறைவனை வேண்டிக்கொள்வது இப்படியான துரோகிகளுக்கு அழுந்தி சாக வேண்டும்....
சாதரண பெண் எனக்கு இருக்கிற உணர்வு கூட இவர்களுக்கு இல்லயே
தமிழ் துரொகிகளிடம் நான் கேட்கும் கேள்வி... நல்லது செய்யாவிட்டாலும்...தயவு செய்து வாயை மூடிட்டு இருக்கவும்....
எங்கள் அண்ணன்மார் அக்காமார் தமிழ் ஈழ விடுதலை புலிகள் மாத்திரம் தான்....
திருகோணமலையிலிருந்து மதுமிதா
மதுமிதா, நீங்கள் ஏன் எதற்குமே அருகதை அற்ற ஒன்றுக்கு விமர்சனம் என்ற பிரபலத்தைக் கொடுக்க முயல்கிறீர்கள். தன்னைப் பிரபலப்படுத்த சிலதுகள் என்ன கூறுவதே என்று தெரியாமல் குரல் கொடுக்கும் அதுபோல்தான் இதுவும்.
மற்றது,
அநுராதபுர விமானத் தளத்தின் மீது தாக்குதலைத் தொடுத்து வான்படையின் பலதரப்பட்ட விமானங்களை அழித்த போராளிகளின் உடலங்களை நிர்வாணமாக்கி இராணுவம் மக்கள் பார்வைக்கு வைத்ததென்பது, சிங்கள இனவாதியரின் இயலாமையின் வெளிப்பாடே! இச்செயலால் இன்னும் தங்கள் தரப்பை கீழ்நிலைப்படுத்துவதையே அரச படைகள் செய்திருக்கின்றன.
சாதாரண சிங்கள மக்களுக்கு தாம் ஏதாவது சாதித்ததாக அரச படைகள் காட்டவேண்டுமே..
போராளிகளின் உடலங்களை நிர்வானப்படுத்தி பார்வைக்கு வைத்து உலகெலாம் பரவிய தமிழ் உள்ளங்களில் உள்ள விடுதலை தணலை மென்மேலும் கொழுந்து விட்டெரியும் வண்ணம் மாற்றியுள்ளார்கள். எங்கள் இனத்திற்கு வலி கொடுப்பதாக நினைத்து வலுவூட்டியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
என்னைப் பொறுத்தவரை நிறையச் சிங்கள மக்கள் எங்களது தலைவரை மதிப்பாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொள்ளத் தலைப்பட்டுள்ளார்கள். புத்த மதத்திற்கு மதிப்பளிக்கும் இனவாதப் போக்கல்லாத சிங்கள மக்கள் அரசியல்ப் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை என்பதே உண்மை.
வல்வை சகாறா said...

கருத்துரையிடுக