சனி, 19 செப்டம்பர், 2009

வரலாற்றுப் பதிவாகும் 150ஆம் நாள் கவனயீர்ப்பு (கனடா)கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 149 நாட்களைக் கடந்தும் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா


அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

150ஆம் நாளான 19 - 9 - 2009 சனிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 9 மணிவரை இக்கவனயீர்ப்பு நிகழ்வு நிகழும் எனவும் அத்தோடு மாலை ரொரன்டோ மத்திய பகுதியில் பேரணியும் இடம்பெறும் என்பதை தொடர்ந்து அங்கு இக்கவனயீர்ப்பை நடாத்திவரும் தன்னார்வத் தொண்டர்கள் அறிவித்தூள்ளார்கள்.

உறவுகளே தொடர்ந்து 150 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கவனயீர்ப்பு ஒரு வரலாற்றுப் பதிவாகிக் கொண்டிருக்கிறது.

எல்லாத்திக்கிலிருந்தும் யூதர்கள்போல் ஒன்றிணையவேண்டும் என்ற கருத்து வரும் அளவிற்கு சொல்கின்ற வாய்களோ எழுதுகோல்களோ செயலாற்றவில்லை என்றே தோன்றுகிறது. புலம்பெயர்ந்த தெருக்களில் கவனயீர்ப்புகள் செய்யும் மக்களைச் சோர்வடையச் செய்யும் உத்திகளுக்கு விலைபோகாமல் தொடர்ந்தும் எங்கள் மக்களின் அறவழிப்போராட்டங்கள் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுவதன் மூலமும் வதை முகாம்களுக்குள் வாடும் எம் மக்களை விடுவிக்க வெளிநாடுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு நெம்புகோலாக மாறலாம்.

இன்றைய திலீப நினைவு நாட்களின் தொடர்ச்சியில் நாமும் எல்லாத் திக்கிலும் எம்மக்களின் அவலவாழ்வை வெளிக் கொணர்வதே காலத்தின் தேவை.
பார்வையாளர்களாக, விமர்சகர்களாக இல்லாமல் புலம்பெயர் மக்கள் போராட்டங்களில் பங்காளிகளாக மாறுங்கள். மக்கள் சக்தி சாதித்தே தீரும்.

கருத்துகள் இல்லை: