கனடாவில் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 135 ஆம் நாள்
கனடா ரொரன்டோ மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியூ வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 135 ஆம் நாளாகத் தொடரும் கவனயீர்ப்பு தினசரி காலை 8 மணியிலிருந்து மாலை 9 மணிவரை நிகழ்ந்து சிங்களத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மெழுகுவர்த்தி ஏந்திய பிரார்த்தனை நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. காட்சிப்படுத்தல்கள் சில...
நாளாந்தம் காலை 8 மணியிலிருந்து மாலை 9 மணிவரை இக்கவனயீர்ப்பு தொடர்ந்து நடைபெறும் என்பதை அக்கவனயீர்ப்பில் கலந்து கொள்ளும் மக்கள் அறிவித்துள்ளனர்.
சத்தியவேள்விகள் சாய்ந்ததாய் சரிதம் இல்லை. சந்தனக்காடுகள் வாசத்தைத் தொலைப்பதில்லை. நித்திலச்சூரியனை இருள் மூடித் தின்பதில்லை. நிலம் பிடித்த பகையும் நீடிக்கப்போவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக